ரயில்வே முன்பதிவு நேரங்கள் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே நிலையங்களில் முன்பதிவு செய்யும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை கோட்ட ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்பதிவு செய்ய வருபவர்கள் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.