வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (10:27 IST)

ஞாயிறு முழு ஊரடங்கு; முன்பதிவு பணம் திரும்ப அளிக்கப்படும்! – போக்குவரத்து துறை!

எதிர்வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு பணம் திரும்ப அளிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவையும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. பொங்கல் சமயம் என்பதால் அன்றைய தினம் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு அன்று பேருந்துகள் இயங்காது என்பதால் முன்பதிவு ரத்து செய்யப்படுவதுடன் முன்பதிவு கட்டணம் 2 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.