செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (12:33 IST)

பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா? – போராட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் கைது!

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டித்து சேலத்தில் போராட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற நிலையில் அவரது கார் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது. இதனால் பிரதமர் மோடி நிகழ்ச்சியை ரத்து செய்து பஞ்சாபிலிருந்து திரும்பினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து பல மாநிலங்களில் இருந்தும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து சேலம் ரயில் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அர்ஜுன் சம்பத் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.