1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Local trains restrictions about corona

மாதாந்திர சீசன் டிக்கெட் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Tamilnadu
சென்னையில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் புறநகர் ரயில் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 6186 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதனால் சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாதாந்திர சீசன் டிக்கெட் பெறுவோர் 2 டோஸ் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் சீசன் டிக்கெட் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் புறநகர் ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் செல்லும் பயணிகளிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ரயில் நிலைய மேம்பாட்டு வசூல்; உயரும் ரயில் டிக்கெட் கட்டணம்!