சுஜித்தை மீட்கமுடியாதது துரதிருஷ்டவசமானது: ராதாகிருஷ்ணன் விளக்கம்
சுர்ஜித் உயிரிழந்தது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை, 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யபட்டது.
இந்நிலையில் சுர்ஜித் மரணம் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். நிரூபர்களை சந்தித்த அவர், “போர்வெல் என்பது பேரிடர் அல்ல, அது விபத்து தான், சுஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும் மனித சக்தியால், எவ்வளவு முடியுமோ, அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயற்சி செய்தோம்” எனவும் கூறியுள்ளார்.