திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (08:47 IST)

சென்னையில் கனமழை..

சென்னையில் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிகடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கிண்டி, கே.கே.நகர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
 
கனமழையால் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆதலால் சாலையில் செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். எனினும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.