திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:38 IST)

தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் – திமுக கோரிக்கை!

தமிழகத்தில் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சட்டமன்றத்தின் காலம் முடிவடையவுள்ளதை அடுத்து அதற்கு முன்னரே தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது.

இதையடுத்து சென்னை வந்த தேர்தல் அதிகாரிகள் தமிழக தேர்தல் அதிகாரிகளுடனும் அரசியல் கட்சி பிரமுகர்களுடனும் ஆலோசனை செய்தனர். அப்போது திமுக சார்பாக தேர்தல் அதிகாரியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தேர்தலின் போது துணை ராணுவப்படையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.