1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (19:17 IST)

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விரும்பினால் பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

சசிகலாவின் வருகையை அடுத்து அதிமுகவில் உள்ளவர்கள் அமமுகவிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் அல்லது சசிகலா ஆதரவாளராக மாற வாய்ப்பிருப்பதாகவும் கருதப்பட்டது
 
ஒரு சிலர் இப்பொழுதே சசிகலா ஆதரவு நிலையை எடுத்துள்ளதாகவும் அதில் சில அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே போல் அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு வருவதற்கும் சிலர் விருப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விரும்பினால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலாவின் வருகைக்குப் பின்னர் அமமுகவில் இருந்து யார் விலகி அதிமுகவுக்கு வருவார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது