1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (18:50 IST)

டி.டி.வி.தினகரன் ஒருபோதும் அதிமுகவை உடைக்க முடியாது – முதல்வர் பரப்புரை

தினகரனால் அதிமுகவை உடைக்க முடியாது என முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துகொண்டிருந்த காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு உதவிய எட்டப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் நேற்று இரவில் ஜெயலலிதாவின் தோழி சசிசலாவுக்கு  கார் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 7 பேர் அக்கட்சியிலிருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டனர்.


அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

தற்போது பரப்புரை மேற்கொண்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :  டிடிவி தினகரன் அதிமுகவை ஒருபோதும் உடைக்க முடியாது. அவருடைய கனவும் பலிக்காது.ஒரு குடும்பம் மட்டும் ஆள்வதற்கு கட்சி தலைவணங்காது எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த பரப்புரையின்போது, தினகரனை நம்பிப் போனால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும். அவரை நம்பி போன 18 எம்.எல்.ஏக்கள் தற்போது நடுரோட்டில் நிற்கிறார்கள் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.