திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (10:56 IST)

இன்று காலை நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம். ராதிகா நேரில் வாழ்த்து

பிரபல நடிகை நமீதாவுக்கு அவருடைய காதலர் வீரேந்திர செளத்ரிக்கும் இன்று அதிகாலை திருமணம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சரியாக அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது.





இந்த திருமணத்தில் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.





ஏற்கனவே திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.