1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Quarry accident in Kanchipuram case filed under 2 sections

கல்குவாரி விபத்து - 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Kanchipuram
காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே விபத்து நிகழ்ந்த கல்குவாரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு. 

 
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் வழக்கமான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென பாறைகள் சரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாறைகள் விழுந்ததால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாறைகளுக்கு அடியில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் சிக்கியுள்ளதாகவும், மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாறைகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. 
 
இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதோடு, காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே விபத்து நிகழ்ந்த கல்குவாரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash