புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (10:20 IST)

தொடரும் கந்துவட்டி கொடுமை; குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சோகம்!

விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் மோகன். ஆசாரி வேலை செய்து வரும் மோகனுக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மோகன் சில மாதங்கள் முன்னர் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வட்டிக்கு வாங்கி சில மாதங்கள் ஆன நிலையில் வட்டி கட்டாமல் இருந்ததால் கடன் தொகை அதிகமாகி மோகனால் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.

வட்டிக்கு கொடுத்தவர்களும் தொடர்ந்து மோகனை மிரட்டி வந்ததாக கூறப்படும் நிலையில் மனமுடைந்த மோகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.