பிரச்சாரத்தின்போது ஒலித்த பாங்கு; பிரச்சாரத்தை நிறுத்திய எடப்பாடியார்!

edapadi palanisamy
Prasanth Karthick| Last Modified வியாழன், 21 ஜனவரி 2021 (11:34 IST)
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனாரோ அதேவழியில் முதல்வர் ஆனதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் கிராமசபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி பின்வாசல் வழியாக வந்து பதவி பெற்றதாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதி நான். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனாரோ அதேபோல்தான் நானும் முதல்வரானேன்” என கூறியுள்ளார்.

இவ்வாறு முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த மசூதியில் பாங்கு ஒலிக்கப்பட்டதால் தனது பிரச்சாரத்தை நிறுத்திய முதல்வர், பாங்கு ஒலித்து முடிக்கும் வரை காத்திருந்து மீண்டும் பேச தொடங்கினார்.இதில் மேலும் படிக்கவும் :