திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (23:35 IST)

புதினின் காதலியை நாடு கடத்த வேண்டும் ! பல ஆயிரம் மக்கள் மனு !

உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் படையெடுத்துப் போரிட்டு  வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைனில் இருந்து சுமார்  நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐதா தெரிவித்துள்ளது.

உக்ரைன் –ரஷ்யா  போர் தொடர்பாக பேரலுக்கு 2 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உக்ரைனின்  படையெடுத்துப் போராடி வரும் ரஷிய ராணுவத்தினர் சுமார் 14,700 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

டான் பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனில் ஒரு பகுதி தற்போது உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.

30  நாட்களாக நடைபெற்று வரும் இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.  இ ந் நிலையில் ரகசிய இடத்தில் உள்ள ரசிய அதிபர் புதினின்  காதலியையும்   அவரது 4 குழந்தைகளையும்  நாடு கடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசிடம் 63000 பேர் கையெழுதிட்ட மனுவை அனுப்பிவைத்துள்ளனர்.