1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (23:12 IST)

விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டரால் பரபரப்பு

விஜய் நடிகர்கள் மதுரையில்  ஒரு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில்                   முன்னணி நடிகர்  விஜய். இவர் தற்போது திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம்   13 ஆம் தேதி இப்படம்  வெளியாகவுள்ளது.  இதையடுத்து,  இவர் வம்சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பீஸ்ட் பட    ரிலீஸை ஒட்டி அவரது ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்ட் இ யுள்ளனர். அதில், 2021 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினை குறிப்பிட்டு தளபதி எனவும்,  2026 ஆம் ஆண்டு  நடிகர் விஜய்-ஐ குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு விஜய்யின் மக்கள் இயக்கம்  அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்  எனக்குறிப்பிடும் வகையில் இருவரது புகைப்படத்தையும் அச்சிட்டு ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.