1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (23:15 IST)

புஷ்பா படத்தின் டான்ஸ் ஆடும் நடிகை !

கடந்தாண்டு புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடலைப் போன்ற பாடல் புஷ்பா -2 ஆம் படத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் –ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் இடம்பெற்றது. இதில், சமந்தா நடனம் ஆடியிருந்தார். இப்பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இ ந் நிலையில் புஷ்பா  2 வது பாடம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திலும்  ஒரு குத்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் சமந்தாவுக்குப் பதில், இந்தி நடிகை திஷா பதானி நடனம் ஆடவுள்ளார்.  இதிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.