ஓபிஎஸ் காலில் விழுந்து ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: புகழேந்தி
ஓபிஎஸ் காலில் விழுந்து ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்டால் மட்டுமே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்வோம் என்றும் புகழேந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே கடும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் அதிமுக இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் தற்போதைய நிலையில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளதால் அவர் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும் என்றும் ஓபிஎஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்
கேபி முனுசாமி ஜெயக்குமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழிவு காலம் வந்து விட்டது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.