புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (07:55 IST)

ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதல் எதிரொலி: வங்கிக்கணக்கு, சின்னம் முடங்கும் அபாயம்!

ops eps
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மோதல் காரணமாக அதிமுகவின் வங்கி கணக்கு மற்றும் சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் தற்போது எடப்பாடிபழனிசாமி கை ஓங்கி உள்ளது என்பதும் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடமும் நீதிமன்றத்திலும் மனுக்களை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தான் மட்டுமே பொருளாளர் என்று வங்கியில் கடிதம் எழுதி உள்ளதால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னமும் முடங்கும் அபாயம் இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது