செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (15:22 IST)

எந்நேரமும் வீடியோ கேம்; அதீத மன உளைச்சல்! – திடீரென தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

புதுச்சேரியில் அதீத வீடியோ கேம் மோகம் காரணமாக பட்டதாரி இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தீபக். பொறியியல் பட்டதாரியான இவர் கொரோனா காரணமாக வீட்டிலேயே இருந்ததால் அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதீதமான வீடியோ கேம் ஈடுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதிகம் யாரிடமும் பேசாமல் அறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீபக் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கேமால் ஏற்பட்ட மன உளைச்சலால் தீபக் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.