செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (13:15 IST)

நேத்துதான் தமிழ் கத்துக்க தொடங்கினேன்! – சென்னை புதிய தலைமை நீதிபதி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முனீஸ்வர் பண்டாரி தமிழ் கற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட அவர் பேசுகையில் “எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன். நேற்றுதான் தமிழ் கற்க தொடங்கினேன். அடுத்து வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சிப்பேன்” எனக் கூறியுள்ளார்.