வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:58 IST)

சொந்த அலுவலகத்தையே நொறுக்கிய பாஜகவினர்! – புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்காத விவகாரத்தில் சொந்த அலுவலகத்தையே பாஜகவினர் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்பே நடந்து முடிந்துவிட்ட நிலையில் கூட்டணியிலும், ஆட்சியிலும் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவு பாஜகவினர் தங்களது சொந்த பாஜக அலுவலத்தையே அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.