1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (16:28 IST)

காவலர்களுக்கு நிவாரணம்: ரூ.58.59 கோடி ஒதுக்கீடு!

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி, வாகன சோதனை, கொரோனா நோய்த்தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன் பாதுகாப்பினை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக கடமைகளை செய்து வந்த அவர்களில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 
 
எனவே காவலர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கியுள்ளார். காவலர்களுக்கு தலா ரூ.5,000 வழங்க மொத்தமாக ரூ.58.59 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 1.17 லட்சம் காவலர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.