1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (18:19 IST)

தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனுக்கு போலீஸார் அறிவுரை!

நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பதும் அடிக்கடி அவர் தனது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். இந்த டுவிட்டை அவர் முதல்வர் மற்றும் பிரதமருக்கும் டேக் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்கொலை செய்து கொள்வதாக மீராமிதுன் செய்த டுவிட்டர் பதவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சென்னை போலீசார் அவருக்கு டுவிட்டர் மூலம் அறிவுரை கூறியுள்ளனர் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து விரிவாக மின்னஞ்சலில் காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் முறையாக புகார் அளித்தால் அவரது புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
காவல்துறையினரின் அறிவுரையை ஏற்று மின்னஞ்சலில் மீராமிதுன் புகார் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்