வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (12:11 IST)

பறிமுதல் செய்த சரக்கை சைடில் விற்று வசூல்! – இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்!

திருச்சியில் கடத்தப்பட்ட மதுபானங்களை பறிமுதல் செய்து கணக்கில் காட்டாமல் சைடில் விற்ற இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் முறைகேடாக ப்ளாக்கில் மது விற்பனை செய்யும் நபர்களை போலீஸார் பிடித்து வருவதுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுப்பாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற நபர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் சுமதி அவர்களிடமிருந்து 1,700 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் விவரங்களை உயர் அதிகாரிகளிடம் சமர்பிக்காமல், ஏட்டு ராஜா என்பவரின் உதவியுடன் வெறு நபர்களிடம் ரூ.2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி, பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு பணியாற்றி வரும் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அதில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்ட நிலையில் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் ஏட்டு ராஜா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.