1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry minister says operation Thirisoolam for Crime control

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ஆபரேஷன் திரிசூலத்தை கையில் எடுத்த நமச்சிவாயம்!

Puducherry
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கி சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பேண போதுமான காவலர்கள் இல்லை என்றும் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற என்ற திட்டத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதற்காக இந்த ஆண்டில் ஆயிரம் காவலர்கள் புதுச்சேரி போலீஸில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஜனவரி 20க்குள் 390 காவலர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஏழை தாயின் மகன் ரூ.12 கோடி காரில் பயணிக்கலாமா?