செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (08:44 IST)

சாட்டை துரைமுருகன் பாயந்தது குண்டாஸ் சட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னர் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் பெண் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் தற்போது சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.