1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (12:01 IST)

இத பாத்தா ரஸ்க் தின்ன தோணுமா? – வடமாநில தொழிலாளியின் செய்கையையடுத்து நடவடிக்கை!

ரஸ்க் பேக்டரி ஒன்றில் வடமாநில தொழிலாளி ரஸ்கை நக்கி, காலால் மிதித்து பாக்கெட் போடுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பண்டங்களில் ரஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரஸ்க் தயாரிப்பது குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் ரஸ்க்கை பாக்கெட் செய்யும் முன் நக்குவதும், காலால் மிதிப்பதும் போன்ற அருவருப்பான செயல்களை செய்வது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காரைக்குடி ரஸ்க் தயாரிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரஸ்க்குகளை தரையில் கொட்டி பாக்கெட் செய்வதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரமற்ற முறையில் செய்யப்பட்ட 200 கிலோ ரஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த ரஸ்க் தயாரிப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.