வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (14:08 IST)

மீன் வலையில் சிக்கிய மான்?? – புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியில் மீன் பிடிக்க வீசிய வலையில் மான் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் இன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். புதுச்சேரி புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த மீணவர்கள் கடலில் மீன்பிடிக்க வலை வீசியிருந்தனர்.

வலை கனமாக இருந்ததால் அனைவரும் சேர்ந்து இழுந்து பார்த்த நிலையில் வலைக்குள் இறந்த நிலையில் புள்ளி மான் ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. இது மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.