புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (08:03 IST)

கடலூரில் இருந்துக்கு பாண்டிக்கு படையெடுக்கும் ’குடிமகன்கள்’

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் எல்லையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் இருக்கும் கடலூர் மாவட்ட குடிமகன்களும் பாண்டிச்சேரிக்கு மதுபானங்களை வாங்க செல்வது அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு சென்று மதுபானங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் விற்பதாகவும் சொல்லப்படுகிறது.