1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (13:59 IST)

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10% இட ஒதுக்கீடா?

மருத்துவ கல்லூரி படிப்பிற்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என தமிழக அரசு புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இந்த மசோதா அமலுக்கு வந்ததன் காரணமாக தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பு படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்க செய்ய வேண்டும் என அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது
 
தமிழகத்தில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10% இட ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்
 
இந்த நிலையில் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் 22 அரசு மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடிகிறது என்று அந்த மாணவி தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது