1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pudhucherry EB department staffs protest

போராட்டக்காரர்கள் மீது எஸ்மா சட்டம்: மத்திய அரசிடம் அனுமதி கோரிய புதுவை அரசு

pudhucherry
புதுவையில் போராட்டம் செய்து வரும் மின்வாரிய ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
புதுவையில் கடந்த சில நாட்களாக மின் வாரியத்தை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு போராட்டம் செய்த 500 மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புதுவை அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
துயரத்தில் ஆழ்த்திய துர்கா பூஜை; தீ விபத்தில் சிக்கிய பக்தர்கள்!