மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்ஜி மதன்!
சிறையில் இருக்கும் பப்ஜி மதன் உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டமும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு முதுகுவலி பிரச்சனை இருப்பதால் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை ஸ்டானிலி மருத்துவமனையில் நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.