தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் கைது: பாஜக -சிவசேனா கட்சியினர் இடையே மோதல்
- தேசிய சொத்துகளை குத்தகைக்கு விடுவதா? ராகுல் காந்தி கடும் கண்டனம்
- பாஜக மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணை குழு அமைத்த அண்ணாமலை
- பாலியல் வீடியோ விவகாரம்; பாஜகவிலிருந்து கே.டி.ராகவன் திடீர் விலகல்!
- மன்னிப்பு கடிதம் எழுதிய சுதந்திர வீரர்?? – சாவர்க்கர் குறித்த கேள்வியால் கொதித்த பாஜக!
யூடியூபர் மதன் பாஜகவில் இருந்து திடீர் நீக்கம்
பாஜகவில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்து கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,பாஜகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகளை தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
