திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (20:33 IST)

Audi A6 சொகுசு காரா? இல்லையா? இணையதளத்தில் டிரெண்டிங்

பப்ஜி மதன் ஆன்லைன் கேம் விளையாடும்போது, சிறுவர், சிறுமியர்களிடம் ஆபாசமாகப் பேசியதால சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டம் சட்டம் பாய்ந்தது.

இதையடுத்து., அவர் மனைவி சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், மதன் பப்ஜி கேமிற்காக தனது யூடியூப் சேனனில் 20 மணிநேரத்தில் உழைத்தார். அவர் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கவில்லை. அவர் மீது தொழில் போட்டி காரணமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களிடம் சொகுசு கார் இல்லை; ஆடி A6 கார் மட்டும்தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கிருத்திகா மதன் பேசியதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். Audi A6 கார் சொகுசு கார் இல்லையென்றால் அதை விட மதிப்பு குறைந்த கார் எல்லாம் எதில் சேர்ப்பது என கேள்வி எழுப்பி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.