1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PTR explain about monthly fund for housewife

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் என்னாச்சு?? – நிதியமைச்சர் பதில்!

Tamilnadu
தமிழக அரசு ஆண்டு பட்ஜெட் அறிவிப்பு முடிந்துள்ள நிலையில் மகளிருக்கு மாதம்தோறும் நிதியுதவி திட்டம் பற்றி நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கியும், பல புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் பட்ஜெட் உரை இருந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த பட்ஜெட் தாக்கலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத்தின் நிதிநிலை மெல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும், நிதிநிலை மேம்பட்ட பின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!!