தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வு, 2 தல ஆய்வு! – சிறப்பு கவனம் அளிக்கும் அரசு!
- ஜிஎஸ்டியால் தமிழகம் வருவாயை இழந்துள்ளது! – பட்ஜெட் தாக்கலில் பழனிவேல் தியாகராஜன்!
- புனித் ராஜ்குமாரின்'' ஜேம்ஸ்'' படம் இன்று ரிலீஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்
- இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ! மக்கள் திண்டாட்டம் !
- பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர் ! மக்கள் அதிர்ச்சி
கல்வி, நூலகங்களுக்கு 455 கோடி நிதி ஒதுக்கீடு! – ஆண்டு பட்ஜெட் சிறப்பம்சங்கள்!
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கல்வி மற்றும் நூலக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அதில் பள்ளிக்கல்வி மற்றும் நூலக மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடியும், தமிழகம் முழுவதும் முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடியும், புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடியும், வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்குமுறை இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றம் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
