ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (14:29 IST)

'பொன்னியின் செல்வன்’ படத்தை விட இதுதான் ஹைலைட்: பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ..!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது தமிழகத்தின் ஹைலைட் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அதைவிட நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ விவகாரம் தான் ஹைலைட் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். 
 
இன்று அவர் மதுரையில் கூட்டம் ஒன்றில் பேசியபோது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட் என்றும் அந்த ஆடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
தில்லுமுல்லு என்ற படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் மீசையோடும் மீசையில்லாத கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோல்தான் திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒன்று சொல்வார்கள், ஆட்சியில் இல்லாத போது ஒன்று செல்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
 
Edited by Siva