1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi palanisamy says about ptr audio issue

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்: எடப்பாடி பழனிசாமி

அமித்ஷா
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோவில் அவர் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன. இந்த ஆடியோவுக்கு பிடிஆர் பழனி ராஜன் அவர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பெயர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல் வெளியான ஆடியோ பற்றி விசாரணை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாங்கள் கூறியுள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்த ஆடியோவில் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது? முக்கிய தகவல்..!