1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Protest on citizenship amendment law

போராட்டக் களத்தில் குதிக்கும் மாணவர்கள்.. குடியுரிமை சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த சட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவை, திருச்சி கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

பின்பு இரவில் பல்கலைகழகத்திற்குள் புகுந்த போலீஸார் மாணவர்களை தாக்கினர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்றிலிருந்து இரவு முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை தொடர்ந்து சென்னை நியூ கல்லூரி மாணவர்களும், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதே போல் கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த கோவை பாரதியார் பல்கலைகழக மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
குடியுரிமை சட்டம்: மீண்டும் போராட்டத்தை அறிவித்த திமுக!