1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:39 IST)

அரசு ஊழியர் சங்கம் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே எதிர்ப்பு

கரூரில் அரசு ஊழியர் சங்கம் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே எதிர்ப்பு - ஒரு தரப்பினர் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு.
 
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் 7 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்குவது போல் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி சிபி எஸ்ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது எனக்கூறி அதாவது தி தமிழ்நாடு கவர்மெண்ட் எம்பிளாய்ஸ் அசோசியேஷன் என்ற சங்கத்தினர் தங்களுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பினரிடையே கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜன் உள்ளிட்ட போலீசார் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர் அப்போது எதிர்தரப்பினர் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கூறி அவர்களும் அவர்களை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்., இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட தயாரான நிலையில் இவர்கள் எதிர்தரப்பினர் கோஷங்களை எழுப்பியதுடன் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.