செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (10:21 IST)

தடையை மீறி ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் & கோ மீது வழக்குபதிவு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
மக்களின் அடிப்படை தேவைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் திமுக அலட்சியம் செய்வதாகவும், வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவை எதிர்த்து மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
முன்னதாக 12 ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் பின்னர் 17 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திமுக அரசை கண்டித்து அதிமுக தமிழக அளவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
 
இந்த போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி “அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். எங்களை தொந்தரவு செய்தால் எதையும் சந்திக்க தயார், திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணி தொடரும். தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு விரைந்து நிறைவேற்றவில்லை எனில் அதனை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை தொடருவோம் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  உள்பட 23 பேர் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், கொரோனா பரவ காரணமாக இருத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.