புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:52 IST)

எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது பாஜக அரசு.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது பாஜக அரசு.