அனுமதி கொடுத்தாலும் தியேட்டரை திறக்கமாட்டோம்... தயாரிப்பாளர்கள் கறார்!
கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளை திறப்பது குறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், காணொலி மூலமாக இன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது.
திரையரங்குகளை மீண்டும் திறந்தால் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஆராயப்பட உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகள்:
1. தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பங்கு தேவை.
2. ஆன்லைன் டிக்கெட் முறியில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாஎகளுக்கும் பங்கு தர வேண்டும்.
அதோடு QUBE கட்டணத்தை இனி செலுத்த முடியாது என திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.