1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:03 IST)

திரையரங்குகள் திறப்பது எப்போது? மத்திய அரசு இன்று ஆலோசனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு, நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது ஆனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கும் மட்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று திரையரங்குகள் திறப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது 
 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். காணொளி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் திரையரங்குகள் எப்போது திறப்பது என்ற முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது 
 
ஐந்து மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்கு ஊழியர்கள் பெரும் கஷ்டத்தில் இருப்பதாகவும் அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வரும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து இன்றைய ஆலோசனையின் போது கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது 
 
அக்டோபர் 1 முதல் திரையரங்கு திறக்க அனுமதிக்கப்பட்டால் விஜய்யின் மாஸ்டர் உட்பட பல திரைப்படங்களை ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது