1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (12:39 IST)

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ப்ளானிங்கு தயாராகும் ஸ்டாலின்!

சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரம் குறித்து டிசம்பர் 20ம் தேதி மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளது. ஆம், உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பரப்புரையில் பிசியாக உள்ளார். 
 
இந்நிலையில், சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரம் குறித்து டிசம்பர் 20 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்ட, மாநகர செயலாளர்கள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுடன் 20 ஆம் தேதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். அண்ணா அறிவாலயத்தில் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.