1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. we the leaders annamalai comment abbout tvk

தமிழக அரசில் என்னதான் நடக்குது?.. ஒன்னும் புரியல!.. அண்ணாமலை பேட்டி!..

annamalai
2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்து தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அதேநேரம் தவெக ஆட்சி நிர்வாகத்திற்கு புதியது என்பதால் அவர்கள் எடுக்கும் பல முடிவுகள் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

ப்ரந்தூர் விமான திட்டத்தை ரத்து செய்தது, ஜோதிடரை சொந்த ஆலோசகராக நியமிக்க விஜய் முடிவெடுத்தது, தனக்கு நெருக்கமானவர்களுக்கு தமிழக அரசில் பதவி கொடுத்தது, பட்டினபக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு எடுத்தது போன்ற அரசின் முடிவுகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது..

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் வி த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை ‘தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த சில மாதங்களில் அரசு எடுக்கும் பல முடிவுகள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழக அரசில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழும்புகிறது.. முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் மாற்றம், சட்ட ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை ஒரு முடிவு எடுக்கப்படுகிறது.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் உடனே அந்த முடிவு திரும்ப பெறப்படுகிறது’ என தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்திய மெட்ரோ ரயிலுக்கு 10க்கு 10 ரேட்டிங் கொடுத்த ரஷ்ய பெண்.. குவியும் பாராட்டுக்கள்...