1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. electricians getting high salary more than ai work

AI படுத்தும் பாடு!.. ஐடி ஊழியர்களை விட அதிகம் சம்பாதிக்கும் எலக்ட்ரீசியன்கள்!..

open ai
சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மென்பொருள் துறையில் அபரிதமாக இருக்கிறது. AI வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் பணிபுரியும் பலரும் வேலை இழந்து வருகிறார்கள். பல நிறுவனங்களும் பல்லாயிரம் ஊழியர்களை தொடர்ந்து நீக்கம் செய்து வருகின்றன..

ஒருபக்கம் இல்லாத ஒன்றை இருப்பது போல AI காட்டுகிறது. இது தொடர்பாக பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஒருபக்கம், AI-யின் வளர்ச்சி மனித குலத்தை பாதிக்கும் என தொடர்ந்து பல வல்லுனர்கள் எச்சரித்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் OPEN AI Agent  அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக் செய்தும் வருகின்றன..

இந்நிலையில், அமெரிக்காவில் டேட்டா சென்டர் கட்டுமான தேவையால் எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சிறப்பு திறன் கொண்ட எலக்ட்ரிஷின்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.22 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது டேட்டா சென்டர் அல்லாத பிற கட்டுமான பகுதிகளில் பணிபுரிபவர்களின் ஊதியத்தை விட 32 சதவீதம் அதிகம் என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இடைத்தேர்தலில் திமுக ஜெயிச்சே ஆகணும்!.. பிரச்சாரத்திற்கு போகும் முக ஸ்டாலின்!..