வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:56 IST)

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கினால் நோய்த்தொற்று ஏற்படும் – சிறைத்துறை நீதிமன்றத்தில் வாதம்!

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சென்னை புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்த அவரது தாயாரின் மனுவுக்கு சிறைத்துறை பதிலளித்துள்ளது.

ராஜீவ் கொலையில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார அற்புதம் அம்மாள் தனது டிவிட்டர் அவரது மகனை பரோலில் விடுதலை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்த புழல் சிறைத்துறை ‘பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல நோய்கள் உள்ளன. இந்த நிலையில் அவரை பரோலில் விடுதலை செய்தால் அவருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது’ எனக் கூறி பரோல் விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.