செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (15:47 IST)

புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் இயக்குநர் இமயம் !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒன்று  கோலிவுட்டில் உருவாகவுள்ளதாகவும் அதற்கு இயக்குநர் பாரதி ராஜா பொறுப்பு ஏற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்த் நிலையில், இதில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்திற்கு விரையில் தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில், அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா என்பவர் தலைமையில் ஒரு அணியும்,  ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில் தற்போது உள்ள சங்கத்தில் படம் தயாரிப்பவர்கள் சுமார் 200 பேர் உள்ளதாகவும்  அவர்கள் படத்தயாரிப்பு தொழிலில் ஒருந்து விலகியுள்ள நிலையில் அவர்களுக்காகவே புதிய சங்கம் ஒன்றை உருவாகவுள்ளனர்.இதில் இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும் டி. சிவா செயலாளராகவும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் இச்சங்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று  திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா. இன்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.