சதி செஞ்சிட்டு, விதி மீது பழியா? சப்பைக்கட்டு கட்டிய பிரமலதா மீது சீமான் பாய்ச்சல்!
தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதால் பிரேமலதா இதில் தலையிட்டு அதிமுகவுக்கு சாதகமாக பேசுகிறார் என சீமான் பேசியுள்ளார்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
மேலும் எதிர்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தும் வந்தனர், இந்நிலையில், தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதியே. அதிமுக பேனர் என்பதால், எதிர்கட்சிகள் இந்த விபத்தை பெரிதுபடுத்துகின்றனர்.
சுபஸ்ரீ உயிரிழந்ததை குறித்து தமிழகத்தை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என்று பிரேமலதா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதை விமர்சித்த நிலையில், இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் காட்டமாக பேசியுள்ளார். சீமான் பேசியதாவது,
வாகனம் ஓட்டி வந்தவர் வெறும் பதாகை என்று நினைத்துதான் பெண்ணின் மீது ஏற்றியுள்ளார். அந்த பதாகை சாலையில் விழாமல் இருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. ஆக தண்ணீர் லாரியை ஒட்டி வந்த நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பதாகையை அச்சிட்டவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால் விபத்துக்கு காரணமான நபர் மீது வழக்கு மட்டும் பதிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இது விதி கிடையாது அரசுடைய சூழ்ச்சி மற்றும் விதி. ஆளுங்கட்சியின் அதிகாரத்தை வைத்து தனது கட்சிக்காரரை காப்பாற்றுவதற்கான முயற்சி ஆகும்.
தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதால் பிரேமலதா இதில் தலையிட்டு அதிமுகவுக்கு சாதகமாக பேசுகிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார்.